Dec 18, 2025
Thisaigal NewsYouTube
பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் விவகாரம்: 44 குடும்பங்கள் இணக்கம்
தற்போதைய செய்திகள்

பத்துகேவ்ஸ் இந்தியன் செட்டில்மெண்ட் விவகாரம்: 44 குடும்பங்கள் இணக்கம்

Share:

கோம்பாக், டிசம்பர்.18-

பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள இந்தியன் செட்டில்மண்ட் (Indian Settlement) மறுமேம்பாட்டுத் திட்டம் குறித்து சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த இந்திய கிராமப் பகுதியில் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக, நேரடியாகப் பாதிக்கப்படும் 44 குடும்பங்கள் கொள்கை அளவில் இத்திட்டத்திற்குத் தங்களின் இணக்கத்தைத் தெரிவித்துள்ளதாக மந்திரி பெசார் கூறினார்.

இந்தப் பகுதி நீண்ட காலமாக மேம்பாடு காணாமல் இருப்பதைச் சுட்டிக் காட்டிய அமிருடின் ஷாரி, சுமார் 10 மில்லியன் ரிங்கிட் செலவில் இங்கு சாலை வசதிகள் மற்றும் இதர அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்தப் பணிகள் வரும் தைப்பூசத் திருவிழாவிற்குப் பிறகு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டர்.

இந்தியன் செட்டில்மண்ட் பகுதியில் நில உரிமை மற்றும் சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான நீண்ட காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்குத் தேவையான தற்காலிக வாடகை உதவி மற்றும் மாற்று இடங்கள் தொடர்பாக அடுத்த ஒரு மாத காலத்திற்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அந்தப் பகுதிக்கு ஒரு புதிய பொலிவைத் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கோம்பாக் மாவட்ட நில அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமிருடின் ஷாரி இதனைத் தெரிவித்தார்.

Related News