Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வியாபாரத்தில் ஏற்பட்டப் பிரச்சனையால் தொழிற்சாலையில் கொள்ளை சம்பவம் – 16 பேர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வியாபாரத்தில் ஏற்பட்டப் பிரச்சனையால் தொழிற்சாலையில் கொள்ளை சம்பவம் – 16 பேர் கைது

நவ. 27-

Kuala Langatட்டின் Telok Panglima Garangகில் உள்ள ஒரு பழைய பொருட்கள் தொழிற்சாலையை 16 பேர் கொள்ளையடித்த சம்பவத்தின் பின்னணியாக வியாபாரம் சார்ந்த பிரச்சனை காரணமாக உள்ளது என காவல் துறை கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தகவல் அளித்த Kuala Langat காவல் துறை இடைக்காலத் தலைவர் Mohd Sufian Amin கூறுகையில், இந்த கும்பல் சீன குடியுரிமை பெற்ற தொழிற்சாலை உரிமையாளருக்கு 4 இலட்ச ரிங்கிட் செலுத்தி இருந்தாலும், அவர் வாக்குறுதி அளித்ததுபோல், இரும்பு பொருட்களை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த கொள்ளை நடந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 9 ஆம் நாள் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 30 முதல் 50 வயதுடைய 16 பேரில் இரண்டு சீன குடிமக்களும் கைது செய்யப்பட்டனர். அவர் தெரிவிக்கயில், இந்த கொள்ளை சம்பவத்தில் குண்டர் கும்பல் தொடர்பான எந்த நடவடிக்கையும் இல்லை என்றும், இவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர்நன்கு அறிமுகமான நண்பர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருந்தனர் என்றும் கூறினார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு சீன குடிமக்கள் தக்க பயண ஆவணமும் அடையாள ஆவணமும் கொண்டிருந்தனர். அவர்கள் தொழிற்சாலை உரிமையாளரின் மொழியைப் புரிந்துகொள்வதால் மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டனர். கைது செய்யப்பட்ட ஒருவரிடம் ஒரு பெரிய பாராங் கத்தி வைத்திருந்ததால், அவர் மீது அபாயகரமான ஆயுதச் சட்டம் 1958 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் Mohd Sufian Amin குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →