கோலாலம்பூர், செப்டம்பர்.11-
கம்போங் சுங்கை பாருவில் இன்று நடந்த குறியிருப்பாளர்கள் வெளியேற்ற நடவடிக்கையின் போது டாங் வாங்கி ஓசிபிடி உதவி ஆணையர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தேசிய காவல் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கூறுகையில், காயமடைந்த டாங் வாங்கி ஓசிபிடி தற்போது கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.








