Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எந்தவொரு சமிக்ஞையும் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

எந்தவொரு சமிக்ஞையும் பெறவில்லை

Share:

எல்மினாவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அந்த தனியார் விமானம், ஆபத்து, அவசர சூழலில் இருப்பதற்கான எந்தவொரு சமிக்ஞையும் சுபாங், சுல்தான் அப்துல் அசிஸ் ஷாஹ் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெறவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த விமானம், சுபாங் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு கட்டுப்பாட்டுக் கோபுரத்திலிருந்து அனுமதிக் கிடைத்தப் பின்னர் இன்னும் 2 நிமிடத்தில் தரையிறங்குவதாக இருந்தது. அதற்குள் இவ்விபத்து நிகழ்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்தார்.

தவிர, அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு பிரச்னையை
எதிர்நோக்கியிருப்பதாக எந்தவொரு தகவலையும் கட்டுப்பாட்டுக் கோபுரம் பெறவில்லை என்று சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காணப்பட்ட ஹுசைன் ஒமார் விளக்கினார்.

Related News