Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அரசமைப்பு சட்டத்தை திருத்த வேண்டுமா? அறிவிலித்தனமான செயல்
தற்போதைய செய்திகள்

அரசமைப்பு சட்டத்தை திருத்த வேண்டுமா? அறிவிலித்தனமான செயல்

Share:

பிரதமர் பதவியை மலாய்காரர் மட்டுமே வகிக்க முடியும் என்பதை வரையறுக்க அரசமைப்புப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு பெர்சத்து கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் முன்வைத்துள்ள யோசனை, ஓர் அறிவிலித்தனமான செயலாகும் என்று அம்னோ முக்கியத் தலைவர் ஒருவர் சாடியுள்ளார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டு இருப்பதைத் தொடர்ந்து மாச்சாங் (Machang) எம்.பி - யான வான் அஹ்மாட் ஃபைசால் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ முஹமாஃப் புவாட் சர்காஷி குறிப்பிட்டுள்ளார்.

பெரிக்காத்தான் நேஷனல் எம்.பி - யான Wan Ahmad, தூர நோக்குப்பார்வை கொண்டிருக்காத ஒரு தலைவர் ஆவார். நடைமுறைக்கு ஒவ்வாத விவகாரத்தை பேசுவது அவருக்கு வழக்கமாகிவிட்டது என்று Puad Zarkashi சாடினார்.

மக்களின் வாழ்க்கைச் செலவீனம் உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு பணத்தை பங்கீட்டு கொடுப்பதற்கு மத்திய வங்கியான பேங்க் நெகாரா அதிகமான பண நோட்டுக்களை அச்சடிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்த நபர்தானே அஹ்மாட் ஃபைசால் என்று புவாட் சர்காஷி கிண்டல் செய்தார்.

Related News