கோல திரங்கானு, செப்டம்பர்.21-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மலேசியத் தீயணைப்பு - மீட்புத் துறை முழு வீச்சில் தயாராகிவிட்டது! நாடு முழுவதும் இருந்து தன்னார்வலர்கள் உட்பட 24 ஆயிரம் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அது மட்டுமல்லாமல், வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு 150 புதிய படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புக் குழுவினர் வருவதற்கு முன் இந்த படகுகளைப் பயன்படுத்தி உள்ளூர் மக்கள் அவசர உதவிகளை மேற்கொள்ளலாம் எனத் துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். இந்தத் தயார் நிலை, வரவிருக்கும் வெள்ளப் பெருக்கிலிருந்து நாட்டைப் பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.








