அலோர் ஸ்டார், செப்டம்பர்.06-
ஜித்ரா அருகே உள்ள கம்போங் சங்லாங்கில் அறுவடை இயந்திரம் ஆற்றில் கவிழ்ந்ததில் பதின்ம வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
இன்று சனிக்கிழமை மதியம் அச்சிறுவன் தனது நண்பர்கள் மூவருடன் அறுவடை இயந்திரத்தை இயக்கிய போது அது ஆற்றில் கவிழ்ந்ததாக நம்பப்படுகின்றது.
இது குறித்து கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் தாங்களாகவே தங்களைக் காப்பாற்றிக் கொண்டதாகவும், ஒருவரை மீட்புக் குழு மீட்டதாகவும், மற்றொரு சிறுவனைத் தேடும் பணி தற்போது நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.








