Oct 12, 2026
Thisaigal NewsYouTube

3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து - மோட்டார் சைக்கிளோட்டி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து - மோட்டார் சைக்கிளோட்டி பலி

குளுவாங், ஏப்ரல்.28-

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பலியானார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் குளுவாங், ஜாலான் பெனுட் – சிம்பாங் ரெங்காம் சாலையின் 19 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

இச்சம்பவத்தில் காவாசாக்கி ரக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த உள்ளூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர், உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படும் அந்த மோட்டார் சைக்கிளோட்டி கார் ஒன்றில் மோதியப் பின்னர் லோரியில் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையிலும், உடலிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஏசிபி பாஹ்ரேன் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →