Jan 19, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் பொது உபசரிப்புக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பில்லை
தற்போதைய செய்திகள்

பிரதமரின் பொது உபசரிப்புக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பில்லை

Share:

பாஸ் கட்சி ஆட்சி செய்யும் 3 மாநிலங்களில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஹரி ராயா பொது உபசரிப்பு நடத்துவதற்கும் வருகின்ற 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என்று அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு விளக்கம் அளித்துள்ளார்.

கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய 3 மாநிலங்களில் பிரதமர் தமது ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்கு முக்கியக் காரணம், மக்களுடனான நெறுக்கத்தை அதிகப்படுத்தவே தவிர, தேர்தல் நோக்கத்தை கொண்டது அல்ல என்று விவசாயத் துறை அமைச்சருமான முகமட் சாபு தெளிவுப்படுத்தினார்.

எனவே 3 மாநிலங்களில் ஹரி ராயா பொது உபசரிப்பை நடத்துவதற்குப் பிரதமர் கொண்டுள்ள திட்டத்தை சர்ச்சையாக்க வேண்டாம் என்று முகமட் சாபு கேட்டுக்கொண்டார்.

Related News