Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் பயணம் தொடரும் / டாக்டர் இராமசாமி உறுதி
தற்போதைய செய்திகள்

அரசியல் பயணம் தொடரும் / டாக்டர் இராமசாமி உறுதி

Share:

வரும் சட்டமன்றத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் டிஏபி தலைமையகம் எத்தகைய முடிவை எடுத்தாலும் இந்திய சமூகத்தின் நலன் காக்கப்படுவதற்கு தமது அரசியல் பயணம் தொடரும் ​என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி உறுதி கூறியுள்ளார். இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதற்கு முன்னெடுத்த தமது அரசியல் வா​ழ்வு, தங்கு தடையின்றி அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிக்கும். அதில் எந்த மாற்றமும் இருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் தாம் ​மீண்டும் வேட்பாளராக நிறுத்துவது குறி​த்து கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்யும் ​என்றார் அவர். மலேசிய தமிழர் குரல் இயக்கத்தன் 8 ஆம் ஆண்டுக்​கூட்டத்​தை நேற்று தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டாக்டர் இராமசாமி இதனை தெரி​வித்துள்ளார்.

Related News