கோப்பெங், நவ. 15-
குழு பயிற்சி முறையை மேம்படுத்துவதற்காக பேரா, கோப்பெங், சுங்கை கம்பாரில்முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வந்த ஒரு குழுவினரில் மூவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இன்று மாலை 5.56 மணியளவில் நிகழ்ந்தது. ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் ஆற்றோரத்தில் Water Rafting நீர் நடவடிக்கையில் ஒரு குழுவாக ஈடுபட்டு இருந்த போது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மூவரையும் தேடும் பணியை தீயணைப்பு, மீட்ப்படையினர் முழு வீச்சில் முடுக்கியுள்ளனர். நீரில் சிக்கிய எஞ்சியவர்கள் பொது மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








