நெகிரி செம்பிலான், குவால பீலாவில் மூன்று ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் துப்பாக்கி, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள்,மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜுன் 26 ஆம் தேதி காலை 6.30 மணியளவில் கோல பிலா, ஜோஹோல். ஆயர் மாவாங், கம்போங் கெமெஞ்சே உலு என்ற இடத்தில் ஒரு வீட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனையில் போலீசார் ஈடுபட்ட போது மூன்று நபர்கள் பிடிபட்டதுடன் துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள், துப்பாக்கி உபகரணங்கள் முதலிய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கோல பிலா மாவட்ட போலீஸ் தலைவர் அம்ரான் முகமட் கானி தெரிவித்தார்.
முதலில் 30 வயது மதிக்கத்தக்க நபர் கைது செய்யப்பட்ட பின்னர் அடுத்தடுத்த சோதனைகளில் 40 வயது மதிக்கத்தக்க மேலும் இரு நபர்கள் பிடிபட்டதாக அம்ரான் முகமட் கனி குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


