கோலாலம்பூர், செப்டம்பர்.24-
மின் தடை காரணமாக நேற்று மூடப்பட்ட எம்ஆர்டி புத்ராஜெயா லைனில் உள்ள ஆறு நிலையங்கள் இன்று காலை 6 மணி முதல் முழுமையாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
இதனையடுத்து நேற்று முதல் தற்காலிகமாக இயக்கப்பட்டு வந்த இந்த 6 நிலையங்களுக்கான இலவச ஷட்டல் பஸ் சேவைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக ரெபிட் ரேல் சென்டிரியான் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
அதே வேளையில், பழுதுபார்க்கும் நடவடிக்கைகளின் போது, பொறுமை காத்த பயணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள ரெபிட் ரேல், தொடர்ந்து அதன் சேவைகளில் பாதுகாப்பு, வசதி மற்றும் நம்பகத்தன்மையை உறுதிச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரெபிட் கேஎல்லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் Pulse செயலி மூலம் அண்மையத் தகவல்களை அறிந்து கொள்ளுமாறும் ரெபிட் ரேல் வலியுறுத்தியுள்ளது.








