Mar 31, 2026
Thisaigal NewsYouTube
  கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை
தற்போதைய செய்திகள்

கூலிம் தொழிற்சாலை அத்துமீறல்: டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஜாமீனில் விடுதலை

Share:

கூலிம், லூனாஸில் உள்ள தனியார் தொழிற்சாலை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் கைது செய்யப்பட்டவர்களில், டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி, சுமார் 8 வாகனங்கள் அனுமதியின்றி ஒரு தொழிற்சாலைக்குள் நுழைந்தன. அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் தடையையும் மீறி, அக்குழுவினர் உள்ளே சென்று காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து, மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர் என்று கெடா மாநில போலீஸ் தலைவர்டத்தோ அட்ஸ்லி அபு ஷா விளக்கம் அளித்துள்ளார்.

டத்தோ கலைவாணர் மற்றும் ஊடகவியலாளர் காளிதாஸ் ஆகிய இருவரும் கடந்த 30-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என டத்தோ அட்ஸ்லி அபு ஷா கேட்டுக்கொண்டார்.

Related News