கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பின் செல்லுபடித்தன்மை குறித்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது மீண்டும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
தாம் பிரதமராக இருந்து கையெழுத்திட்டுள்ள பரிந்துரை தொடர்பான ஆவணம் குறித்து துன் மகாதீரே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளார்.
முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சர் பி. வேதமூர்த்தி, அன்வாருக்கு எதிராகத் தொடுத்துள்ள சட்ட நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த போது துன் மகாதீர் இந்தச் சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
அன்வாரின் அரச மன்னிப்பின் செல்லுபடித்தன்மை குறித்து முடிவு செய்யப்பட வேண்டும் என்று துன் மகாதீர் வலியுறுத்தியுள்ளார்.








