Oct 16, 2026
Thisaigal NewsYouTube

உடல் ஊனமுற்றவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உடல் ஊனமுற்றவர்கள் இருவர் மீட்கப்பட்டனர்

ஜோகூர்பாரு,டிச. 23-

சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு உடல் ஊனமுற்றவர்களை பிச்சை எடுக்க வைத்து, மனித கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் இரு நபர்களை போலீசார் கைது செய்த வேளையில் பிச்சை எடுத்த இரண்டு மாற்றுத்திறனாளிகளையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நேற்று இரவு 10.50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட Ops Pintas Mega Tip சோதனை நடவடிக்கையின் மூலம் ஜோகூர்பாரு, ஸ்கூடாய், துன் அமினா, தாமான் உங்கு, ஜாலான் பெர்காசா ஐந்தில் 67 வயது உள்ளூரைச் சேர்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்ததாக ஜோகூர்பாரு மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் மஹிந்தர் சிங் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்த மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டதுடன், ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமினா, ஜாலான் தெமங்கோங் மூன்றில் சீன நாட்டைச்சேர்ந்த உடல் ஊனமற்றவர்களான 39 வயது பெண்ணையும், 36 வயது ஓர் ஆடவரையும் போலீசார் மீட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்