Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில்திருக்குட நன்னீராட்டு விழா

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில்திருக்குட நன்னீராட்டு விழா

சிரம்பான், நவ. 23-


சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் ஆலய வருடாபிஷேக பெருவிழா வரும் நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.04 மணி முதல் 11.04 மணி வரை வெசிறப்பாக நடைபெறவிருக்கிறது.

திருவண்ணாமலை, மலையடி வாரத்தில் உள்ள ஆதி பெரிய நாயகி அம்பாள், இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் திருவண்ணாமலை ஆதி பெரிய நாயகி அம்பாள் வீற்றிருக்கும் முதல் ஆலயமாக அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்ர தேசிக சுவாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி இக்குட முழக்கு பெருவிழா நடைபெறவிருக்கிறது.

பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தினரின் பெரும் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்கப்பட்டுள்ள இக்குட முழக்கு பெருவிழானது, ஆலயத்தில் இவ்வாண்டில் நடைபெறவிருக்கும் இரண்டாவது மகா கும்பபிஷேக விழாவாகும்.

இக்குட முழக்கு பெருவிழாவிலும், வருடாபிஷேக பெருவிழாவிலும், சிறப்பு பூஜைகளிலும் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி ஆலய நிர்வாக சபையினர் சார்பில் ஆலய முதன்மை குருக்கள் சிவஸ்ரீ அ. புவிதர்ஷன் குருக்கள் கேட்டுக்கொள்கிறார்.

அதேவேளையில் இக்குட முழக்கு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்குவதாக சிவஸ்ரீ . புவிதர்ஷன் குருக்கள் குறிப்பிட்டார்.

உபயம் மற்றும் இதர விவரங்களுக்கு ஆலய நிர்வாக சபையினரை 017- 3225400 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →