Oct 10, 2026
Thisaigal NewsYouTube

விபத்தில் ஒருவர் பலி, இதர நால்வர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபத்தில் ஒருவர் பலி, இதர நால்வர் படுகாயம்

ஈப்போ, மே.31-

இரண்டு எம்பிவி வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர நால்வர் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் பேரா, கேரிக் – குப்பாங் – கேரிக் சாலையின் 1.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.

நிசான் கிராண்ட் லிவினா ரக எம்பிவி வாகனத்தைச் செலுத்திய 49 வயதுடைய ஆடவர், கடும் காயங்களுக்கு ஆளாகி உயரிழந்ததாக கேரிக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் பிஃர்டாவுஸ் அப்துல்லா தெரிவித்தார்.

குப்பாங்கிலிருந்து கேரிக் நோக்கி அந்த வாகனத்தில் பயணம் செய்த இதர பயணிகளான 56 வயதுடைய இரு பெண்கள் மற்றும் 21 வயதுடைய ஓர் ஆடவர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த நால்வரும் பயணித்த எம்பிவி வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நுழைந்ததில் மற்றொரு எம்பிவி வாகனத்தினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் காரை மோதிய பெரோடுவா அல்ஸா எம்பிவி வாகனத்தின் ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகி தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை