Sep 22, 2026
Thisaigal NewsYouTube
நாய்க்குத் தீயிடப்பட்டச் சம்பவம், போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

நாய்க்குத் தீயிடப்பட்டச் சம்பவம், போலீஸ் விசாரணை

Share:

நாய்க்குத் தீயிடப்பட்டு, சித்ரவதைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் காணொளி தொடர்பில், போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை, ஸ்கூடாய், தாமான் இம்பியான் ஃமாஸ் சில் நடந்ததாகக் கூறப்படும் இச்சம்பவம் தொடர்பாக புகார் ஒன்றை போலீசார் பெற்றுள்ளதாக வட ஜொகூர் பாரு மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஃபாரிஸ் அம்மார் அப்துல்லா தெரிவித்தார்.

இந்த மனிதாபிமானமற்ற, அராஜக செயலைப் புரிந்த நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருவதாகவும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று ஃபாரிஸ் அம்மார் குறிப்பிட்டார்.

Related News