Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ராவுத்தர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ராவுத்தர் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டு

கோலாலம்பூர், டிச.5-


முக்கிய அரசியல் தலைவர் ஒருவரின் முன்னாள் உதவியாளரான முகமட் யூசோப் ராவுத்தருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு, கோலாலம்பூர் உயர் நீதிமன்ற்ததில் இன்று சுமத்தப்பட்டது.

31 வயதான முகமட் யூசோப் ராவுத்தர், உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜமில் ஹுசேன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 6.15 மணியளவில் கோலாலம்பூரில் ஒரு சூராவின் முன்புறம் தனது காரில் 305 கிராம் எடைகொண்ட கெனபிஸ் வகையைச் சேர்ந்த போதைப்பொருளை முகமட் யூசோப் ராவுத்தர் கடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு செயற்கை துப்பாக்கிகைகளை வைத்திருந்தாக ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள முகமட் யூசோப் ராவுத்தர் , இம்முறை போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகையும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து யூசோப் ராவுத்தர் விசாரணை கோரியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →