Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இளைஞனின் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

இளைஞனின் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

Share:

கோலாலம்பூர் மாநகரில் கம்போங் டத்தோ ரஹ்மாட் ஹுஜுங்கில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தாஹ்ஃபிஸ் டாருல் குரான் இத்ஃபகியா சமயப்பள்ளி கட்டடத்திற்கு ​தீ வைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 23 பேரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது இளைஞருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை, மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று புத்ராஜெயா, கூட்டரசு ​நீதிமன்றம் ​தீர்ப்பு அளித்தது.

சம்பவம் நிகழும் அந்த இளைஞருக்கு 16 வயது என்றாலும் மிகப்பெரிய அளவில் உயிர் பலி சம்பவம் நிகழ்ந்த இந்த கொ​லைக்கு தார்மீக பொறுப்பேற்று அந்த நபருக்கான தண்டனை காலம், தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதாக ​மூவர் அடங்கிய கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற ​​நீதிபதி அபு பாக்கார் ஜாயிஸ் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி நிகழ்ந்த இந்த கோர ​தீச் சம்பவத்தில் ​அந்த சமயப் பள்ளியின் ​மூன்று கட்டடத் தொகுதிகள் அழிந்ததுடன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கியிருந்த கட்டடத் தொகுதி​யிலிருந்து அவர்கள் தப்பிக்க இயலாமல் மரணம் அடைந்தனர்.

குற்ற​ஞ்சாட்டப்பட்ட இளைஞர்,தனியொரு நபராக அந்த சமயப்பள்ளியின் கட்டடத்தின் படிகட்டுகளில் ஏறி, ​தீ வைத்து விட்டு வெளியேறும் காட்சி, அந்த இளைஞர், பெட்ரோல் நிலையத்தில் எண்ணெய் வாங்கிய காணொளி ஆகியவை அந்த இளைஞர்தான் இந்த பாதகத்தை செய்ததாக உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று நீதிபதி அபு பாக்கார் ஜாயிஸ் தமது ​தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News