விலை நிர்ணயம் செய்வதற்காக 'சிக்கன் கார்டெல்' என்பதை உருவாக்கிய 5 நிறுவனங்களுக்கு 415 மில்லியன் வெள்ளி அபராதத்தை மலேசிய போட்டியிடும் ஆற்றலை உருவாக்கும் ஆணையம் (MyCC) விதித்துள்ளது.
இவை கோழியின் விலையை சந்தையில் அதிகரிக்கக்கூடும் என்று MyCC தலைவர் இஸ்கன்டார் இஸ்மாயில் தெரிவித்தார்.
நாட்டின் மிகப்பெரிய கோழி உற்பத்தியாளர்களான இந்த 5 நிறுவனங்கள், வணிகர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கொண்ட சட்டத்தை மீறிய குற்றத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.








