Oct 16, 2026
Thisaigal NewsYouTube

ஐஸ் பெட்டிக்குள் மூதாட்டியின் சடலம் : சந்தேக நபர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஐஸ் பெட்டிக்குள் மூதாட்டியின் சடலம் : சந்தேக நபர் நாளை குற்றஞ்சாட்டப்படுவார்

கோலாலம்பூர், நவ. 25-


கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள ஒரு வீட்டில் தனது தாயாரை கொன்று, மூன்று ஆண்டு காலமாக ஐஸ்பெட்டியில் வைத்திருந்ததாக கூறப்படும் நபர், நாளை கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

53 வயதுடைய அந்த நபரை, நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கான அனுமதியை சட்டத்துறை அலுவலகம் இன்று வழங்கியுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை அல்லது மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த நபர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

80 வயதுடைய தனது தாயாாரை மழுங்கிய பொருளினால் நெஞ்சியிலேயே அடித்து கொன்று இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சந்தேக நபர், கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சடலத்தை வீட்டின் ஐஸ் பெட்டிக்குள் சடலம் வைத்திருந்ததாக கூறுப்படுகிறது.

தனது தாயாரை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பதற்காக அவரை அடித்துக்கொன்றதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →