Oct 2, 2026
Thisaigal NewsYouTube

பாதுகாப்பான தொலைத்தொடர்புச் சேவை: நாளை முதல் மைடிஜிட்டல் ஐடி கட்டாயம்!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாதுகாப்பான தொலைத்தொடர்புச் சேவை: நாளை முதல் மைடிஜிட்டல் ஐடி கட்டாயம்!

கோலாலம்பூர், நவம்பர்.30-

மோசடிகளைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து மலேசியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மைடிஜிட்டல் ஐடி அங்கீகாரத் தொழில்நுட்பத்தைத் தங்கள் கைப்பேசிச் செயலிகளில் ஒருங்கிணைக்கத் தொடங்கவுள்ளன. இந்த தேசிய அளவிலான முன்முயற்சியானது, சரிபார்க்கப்படாத சிம் அட்டைகளைப் பயன்படுத்தி நடக்கும் மோசடி அழைப்புகள், ஆள்மாறாட்டங்கள், அடையாள மோசடிகள் ஆகியவற்றிலிருந்து பயனர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டார் NACSA எனப்படும் தேசிய இணையப் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டாக்டர் மெகாட் ஸுஹைரி மெகா தஜுடின்.

இதன் முக்கிய அம்சமாக, இனிமேல் புதிய PREPAID சிம் அட்டைகள் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் செயலி மூலம் மைடிஜிட்டல் ஐடி வழியாகச் சரிபார்க்கப்படுவது கட்டாயம். மேலும், பயனர்கள் தங்கள் மைகாட் எண்ணின் கீழ் பதிவுச் செய்யப்பட்டுள்ள அனைத்து PREPAID எண்களையும் சரிபார்த்து, மோசடிப் பயன்பாட்டைத் தடுக்கலாம். இந்தச் செயல்முறைகள் மூலம் ஒவ்வொரு கைப்பேசி எண்ணும் ஒரு சரியான, நம்பகமான டிஜிட்டல் அடையாளத்துடன் இணைக்கப்பட்டு, இணையக் குற்றவாளிகள் சிம் அட்டைகளைப் பயன்படுத்தும் வழிகள் முடக்கப்படும் என்று NACSA நம்புவதாக டாக்டர் முகமட் ஸுஹைரி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →