கோலாலம்பூர், டிசம்பர்.22-
கோலாலம்பூர், ஸ்தாப்பாக் பகுதியில் இன்று காலையில் அம்புலன்ஸ் உட்பட 7 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயமுற்றார்.
இந்த சம்பவம் Kampung Baru Air Panas, Jalan Usahawan 6 இல் காலை 8.10 மணியளவில் நிகழ்ந்தது. Jalan Kilang- கிலிருந்து வந்த செம்பிறைச் சங்கத்தை சேர்ந்த அம்புலன்ஸ் சைரன் ஒலியுடன் சமிக்ஞை விளக்கை கடக்க முயற்சி செய்த போது, அந்த வண்டியைக் கார் ஒன்று மோதியது.
நிலை தடுமாறிய அம்புலன்ஸ் வண்டி, இதர வாகனங்களை மோதித் தள்ளியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஸாம்ஸுரி முகமட் ஈசா தெரிவித்தார்.
இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயமடைந்தார். விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








