Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பட்டறை உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஆடவரை போலீஸ் தேடுகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பட்டறை உரிமையாளருக்கு கத்திக்குத்து: ஆடவரை போலீஸ் தேடுகிறது

சுபாங், டிச.11-


சுபாங்கில் உள்ள ஒரு பட்டறையில் அதன் உரிமையாளர் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயத்திற்கு ஆளாகியது தொடர்பில் வாடிக்கையாளர் என்று நம்ப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று மாலை 5.20 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் 54 வயது நபர் கடும் காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

தமது காரின் பிரேக் செயல்படவில்லை என்று கூறி, அந்த பட்டறைக்கு வந்த உள்ளூரைச் சேர்ந்த 40 வயது சந்தேகப் பேர்வழி, காரை பழுது பார்ப்பதற்கு கொடுத்ததாக ஏசிபி வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

கார் சீர் செய்யப்பட்டப்பின்னர் அதற்கான பணத்தை செலுத்திய அந்த நபர், காரில் புறப்பட்டு சென்று விட்டார். சுமார் 2 மணி நேரம் கழித்து மீண்டும் அந்தப் பட்டறைக்கு வந்த அந்நபர், பட்டறை உரிமையாளருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன் கூர்மையான ஆயுதத்தினால் அவரை தாக்கி விட்டு பெரோடுவா அல்சா ரக காரில் தப்பிச்சென்று விட்டதாக ஏசிபி வான் அஸ்லான் தெரிவித்தார்.

அருகில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு செல்லப்பட்ட பட்டறை உரிமையாளர், அதிகமான ரத்தம் வெளியேற்றத்தால் பின்னர் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஏசிபி வான் அஸ்லான் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →