சிரம்பான், ஆகஸ்ட்.21-
செம்பனை எண்ணெயை ஏற்றிக் கொண்டுச் சென்ற டெங்கர் லோரி ஒன்று திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 259 ஆவது கிலோமீட்டரில் சிரம்பான் அருகில் நிகழ்ந்தது.
இந்தத் தீ விபத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தீயணைப்பு வீரர்களைக் கொண்டு தீ முழு வீச்சில் அணைக்கப்பட்ட போதிலும் லோரி 60 விழுக்காடு சேதமுற்றது.








