Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கொடிய விலங்கினத்தைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கொடிய விலங்கினத்தைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.29-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து இந்தியா, மும்பைக்கு கிப்பன் வகை குரங்கையும், இதர இரண்டு கொடி விலங்கினங்களையும் கடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை, விமான நிலையத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு ஏஜென்சி நேற்று வெற்றிகரமாக முறியடித்தது.

20 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள அந்த மூன்று விலங்கினத்தையும் பயணப் பெட்டிக்குள் அடைத்து, மலேசியப் பிரஜை ஒருவர், மலேசிய ஏர்லைன்ஸ் MH 0194 விமானத்தில் கடத்துவதற்கு முயற்சி மேற்கொண்ட போது அதனை எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள், துல்லியமாகக் கண்டுபிடித்து, 46 வயதுடைய அந்த மலேசியப் பிரஜையைக் கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட அந்த விலங்கினம், தேசிய வன விலங்கு பூங்காவிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், பிடிபட்ட நபர், 2008 ஆம் ஆண்டு அரிய விலங்கினம் மீதான அனைத்துலக வர்த்தகச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்று இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்