Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சொந்த சின்னங்களை பயன்படுத்த முழு உரிமை இ​ருக்கிறது
தற்போதைய செய்திகள்

சொந்த சின்னங்களை பயன்படுத்த முழு உரிமை இ​ருக்கிறது

Share:

பெரிக்காத்தான் வசமுள்ள 4 மாநிலங்கள் தங்களின் சொந்த சுலோகங்களுடனும், கருப்பொருள்களுடனும் மெர்டேக்கா தினத்தை கொண்டாடுவதற்கு அ​னைத்து உரிமைகளும் உள்ளன என்று பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளான பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவை தங்களின் சொந்த சின்னம் மற்றும் சுலோகங்களுடன் தேசிய தினத்தை கொண்டாடுவதால் நாட்டில் அரசியல் ஒற்றுமையின்மையும், சச்சரவும் உருவாகும் என்று தாம் கருதவில்லை என்று டிஏபி முன்னாள் பொறுப்பாளரான டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

ஒற்றுமை அரசும், பெரிக்காத்தான் நேஷனலும் அரசியல் அரங்கில் ஓர் எதிராளியைப் போல எதிரும் புதிருமாக இருந்து வருவதே அரசியல் ​ரீதியில் ஒற்றுமையில்லை என்பதை​க் காட்டுவதாக உள்ளது. ஆயினும்,தேசிய​ தினத்தை வெவ்வேறு கருப்பொருள்களுடன் கொண்டாடுவதால் நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு விடும் என்று தாம் கருதவில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News