Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மகா கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டு நாள் இசை நிகழ்ச்சி
தற்போதைய செய்திகள்

மகா கும்பாபிஷேகத்தையொட்டி இரண்டு நாள் இசை நிகழ்ச்சி

Share:

பத்துமலை திருத்தலத்தில் ஸ்ரீ மகா துர்க்கையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், வரும் நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்குள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

இந்த மகா கும்பாபிஷேகத்தையொட்டி வரும் நவம்பர் 18 ஆம் தேதி சனிக்கிழமை மாலையிலும் , நவம்பர் 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையிலும் தென்னிந்திய திரைப்பட பின்னணியைப் பாடகர்கள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

செந்தில்தாஸ், கலைமாமணி மாலதி லஷ்மன், மகாலிங்கம் ஆகியோர் இதில் பங்கேற்கவிருக்கிறனர். ஈப்போவை சேர்ந்த செந்தமிழ் இசையரசி திருமதி யமுனா ஆறுமுகத்தின் இசை நிகழ்ச்சியும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தவிர, ஏ. கணேசன் பிள்ளை முன்னிலையில் அகில மலேசிய நாதஸ்வரம் - தவில் இசைக் கலைஞர்கள் இயக்கத்தினர் மற்றும் தேவஸ்தான இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் மாபெரும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.

மகா கும்பாபிஷேத்தில் கலந்து கொள்ளும் மக்கள், அம்மனின் அருளைப் பெற்று அருளிசையும் பருக அன்புடன் அழைப்பு விடுத்துள்ளார் கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா.

Related News