தஞ்சோங் காராங்கில் 20 டன் எடை கொண்ட லாரியின் பின்புறத்தில் புரோட்டோன் எஸோரா கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். மேலும் 10 வயது சிறுவன் படுகாயமடைந்தார்.
இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் ஜாலான் ராஜா மூடா மூசாவில் இருந்து தஞ்சோங் காராங்கை நோக்கிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது. உயிரிழந்தவர்கள் 44 வயது பெண், 12 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நான்கு பேரும் காருக்குள் சிக்கியிருந்த நிலையில், தஞ்சோங் காராங்கிலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 10 வயது சிறுவன் மேலதிக சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டார்.








