May 22, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் வெற்றி இந்தோனேசியர்களன் வெற்றி: பிரபோவோ
தற்போதைய செய்திகள்

தேர்தல் வெற்றி இந்தோனேசியர்களன் வெற்றி: பிரபோவோ

Share:

இந்தோனேசியாவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அந்நாட்டு தற்காப்பு அமைச்சர் Prabowo Subianto, தம்முடைய இந்த வெற்றியானது, அனைத்து இந்தோனேசியர்களின் வெற்றியாகும் என்று வர்ணித்துள்ளார்.

அதிபர் ஜோக்கோ விடோடோவின் தீவிர ஆதரவாளரான Prabowo Subianto, இந்தோனேசியாவின் புதிய அதிபராக பதவியை ஏற்கிறார். இதன் மூலம் ஜோக்கோ விடோடோவின் கொள்கைகள் நாட்டில் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் 72 வயதான Prabowo Subianto, 60 விழுக்காடு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலால் பிளவுபட்ட இந்தோனேசிய மக்களை ஒன்றிணைக்க வேண்டிய மிகப்பெரிய கடமையையும், சவாலையும் அவர் எதிர்நோக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Related News