கெடா, லூனாஸில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சமய உணர்வுக்கு குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநர் ஒருவருக்கு கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 9 ஆயிரத்து 500 வெள்ளி அபராதம் விதித்தது.
பட்டர்வொர்த், தெலூக் அயிர் தவார் ஐ சேர்ந்த எஸ்.வேலன் என்ற 43 வயதுடைய அந்த வேன் ஓட்டுநர் இக்குற்றத்தை கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 3.26 மணியளவில் லூனாஸ், தாமான் குச்சாய் யில் மஸ்ஜிட் ஜாமேக் பள்ளிவாசல் வளாகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி மிர்சா முகமட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான இரண்டு குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்டன. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 298 ஆவது பிரிவின் கீழ் மூர்த்தி குற்றம் சுமத்தப்பட்டார்.
எனினும் தனக்கு எதிரான குற்றத்தை வேலன் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதித்தது.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


