ஷா ஆலாம், டிசம்பர்.31-
போக்குவரத்து சம்மன்களில் 70 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்பட்ட காலக் கட்டத்தில், மொத்தமாக சுமார் 19.5 மில்லியன் ரிங்கிட் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த 70 விழுக்காடு அபராத தள்ளுபடி திட்டமானது, கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பொதுமக்கள் பழைய அபராதங்களைச் செலுத்த ஆர்வம் காட்டியதாகவும் சிலாங்கூர் போலீஸ் குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கலின் மூலமாக, பொதுமக்கள் இப்போது வேகமான பரிவர்த்தனைகளை விரும்புகிறார்கள் என்பதை இந்த வசூலானது காட்டுவதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், நிலுவையிலுள்ள சம்மன்களைச் செலுத்திய பொதுமக்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.








