Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தனிநபரின் நிதி வளத்தைப் பாதிக்கச் செய்யும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தனிநபரின் நிதி வளத்தைப் பாதிக்கச் செய்யும்

கோலாலம்பூர், ஜூன்.25-

தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஃஎப்பிலிருந்து ஒரு பகுதி நிதியை மீட்டு, மருத்துவக் காப்புறுதிக்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் யோசானையானது, சம்பந்தப்பட்ட சந்தாதாரரின் நீடித்த வாழ்வியல் நிதி வளத்தைப் பாதிக்கச் செய்து விடும் என்று நிதி ஆலோசகர்கள் கருத்துரைத்துள்ளனர்.

இபிஃஎப் 2 ஆவது கணக்கிலிருந்து குறிப்பிட்டத் தொகையை மீட்டு, மருத்துவக் காப்புறுதிக்கு பயன்படுத்துவது நல்ல யோசனையே. ஆனால், அத்தகையக் காப்புறுதி காப்பீட்டு பாலிசியைப் பெறுவதற்கு இபிஃஎப், பணத்திலிருந்துதான் கை வைக்க வேண்டுமா? என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நிதி ஆலோசகரான ராஜேந்திரன் வைரவன் கூறுகிறார்.

இபிஃஎப் என்பது அந்திம காலப் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் சேமிப்புப் பணமாகும். அதன் நோக்கமும், இலக்கும் பிறர் தயவின்றி ஒருவரை அந்திம காலப் பயணத்தை செம்மையுற வழிநடத்துவதாகும். ஆனால், பிற நோக்கங்களுக்காக இபிஃஎப் பணம் கை வைக்கப்படுமானால், அவர்களின் அந்திம வாழ்க்கையில் நிதி வளம் போதுமானதாக இருக்காது. அது அவர்களைச் சிரமத்தில் ஆழ்த்தும் என்று ராஜேந்திரன் ஆலோசனை கூறுகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →