Mar 17, 2026
Thisaigal NewsYouTube
மேலும் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

மேலும் இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்

Share:

காஜாங்கில் உணவு விநியோகிப்பாளரை மோதித் தள்ளியப் பின்னர் தப்பிக்க முற்பட்ட கார் ஓட்டுநரை மடக்கி, பொது மக்கள் சரமாரியாக அடித்து கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.

23 , 40 வயதுடைய அந்த இரண்டு நபர்கள் நேற்று காஜாங்கில் கைது செய்யப்பட்டனர். இத்துடன் இந்த தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 பேர் பேராக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர், போதைப்பொருள் தொடர்பில் 10 குற்றப்பதிவுகளை கொண்டு இருப்பதாகவும், சிரம்பான் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபரின் மரணத்திற்கான காரணத்தை முடிவு செய்யும் பொறுப்பை மருத்துவமனையிடமே தாங்கள் விட்டு விடுவதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசைன் ஓமர் இதனை தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அன்றிரவு போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் ஐவரை கைது செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு