மலாக்கா, செப்டம்பர்.25-
மதுபோதையில் இருந்து இருக்கலாம் என்று நம்பப்படும் Four Whell Drive வாகனமோட்டி ஒருவர், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் வாகனத்தை நிறுத்தும் போது மற்ற ஐந்து வாகனங்களை மோதித் தள்ளி சேதம் விளைவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் மலாக்கா, செங், லெபோ ஏஎம்ஜே, சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது. Mitsubishi Triton ரகத்தைச் சேர்ந்த அந்த பிக்கப் வாகனம், பண்டார் மலாக்காவில் இருந்து வந்து கொண்டிருந்த போது, வேகக் கட்டுஒபாட்டை இழந்து இருக்கலாம் என்று பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
இரண்டு BMW கார்கள், ஒரு பெரோடுவா அஸியா கார், மற்றொரு மைவி கார், ஒரு நிசான் அல்மேரா கார் ஆகியவை இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்தன. இதில் அறுவர் காயம் அடைந்தனர். அனைவரும் மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் குறிப்பிட்டார்.








