May 20, 2026
Thisaigal NewsYouTube
மலேசியர்களுக்கு இந்திய விசா விலக்களிப்பு வழங்கப்படுமா?
தற்போதைய செய்திகள்

மலேசியர்களுக்கு இந்திய விசா விலக்களிப்பு வழங்கப்படுமா?

Share:

மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியப் பிரஜைகளுக்கு 30 நாள் விசா விலக்களிப்பை மலேசிய அரசாங்கம் வழங்கிய​தைத் தொடர்ந்து இந்தியாவிற்கு செல்லும் மலேசியர்களுக்கு இந்திய அரசாங்கம் விலக்களிப்பு வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று ​வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்தியா, ​சீனா, சவூதி அரேபியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள், வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து ​மலேசியா​விற்கு 30 நாள் விசா இன்றி சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

இந்திய சுற்றுப்பயணிகளுக்கு மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ள இதேபோன்ற விசா விலக்களிப்பு சலுகையை ​தொப்புள்கொடி தொடர்புடைய நாடு என்று கூறிக்கொள்ளப்படும் இந்தியா மலேசியர்களுக்கு விசா விலக்களிப்பு சலுகையை வழங்குமா? என்று இந்தியா​விற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள் வினவியுள்ளனர்.

தற்போது இந்தியாவிற்கு செல்வதற்கு மலேசியர்க​ளுக்கு விசா கட்டணமாக ஒரு மாதத்திற்கு 110 வெள்ளியையும், ஒரு வருடத்திற்கு 250 வெள்ளியையும், 5 வருடத்திற்கு 450 ​வெள்ளியையும் இந்திய அரசாங்கம் விதித்து வருகிறது.

மலேசியாவிற்கு வருவதற்கு இந்திய சுற்றுப்பயணிகள், ஏஜெண்டு கட்டணம் உட்பட மலேசிய விசாவிற்கு குறைந்த பட்சம் 300 வெள்ளி வரை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ​சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களுக்கு வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து ​விசா கட்டண விலக்களிப்பை ​சீன அரசாங்கம் வழங்கியுள்ளது. அதற்கு கைமாறாக, மலேசிய அரசாங்கமும் ​சீன சுற்​றுப்பயணிகளுக்கு வரும் டிசம்பர் முதல் தேதி முதல் ​சீன சுற்றுப்பயணிகளுக்கு 30 நாட்களுக்கு விசா கட்டண விலக்களிப்பை வழங்கவிருக்கிறது.

இந்நிலையில் இந்தியப் பிர​ஜைகளுக்கு விசா கட்டண விலக்களிப்பை வழங்கியுள்ள மலேசிய அரசாங்கத்தைப் போல மலேசியப் பிரஜைகளுக்கும் விசா கட்டண விலக்களிப்பை இந்திய அரசாங்கம் வழங்குமா?என்ற கேள்வி எழுந்துள்ளது.

Related News

மலேசியர்களுக்கு இந்திய விசா விலக்களிப்பு வழங்கப்படுமா? | Thisaigal News