Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் மிரட்டல் மின்னஞ்சல்கள் - அரசியல் பின்னணியை ஆராய்கிறது போலீஸ்
தற்போதைய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் மிரட்டல் மின்னஞ்சல்கள் - அரசியல் பின்னணியை ஆராய்கிறது போலீஸ்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.17-

AI தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான ஆபாசக் காணொளிகளை வெளியிடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு வந்த மின்னஞ்சல்கள் குறித்து தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான இந்த அச்சுறுத்தல்களுக்குப் பின்னால் அரசியல் பின்னணியோ அல்லது பண மோசடிக் கும்பலோ இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாக, தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நவீன தொழில்நுட்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில தரப்பினர், இது போன்ற செயல்களில் ஈடுபடத் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்றும் காலிட் இஸ்மாயில் உறுதியளித்துள்ளார்.

Related News