கோலாலம்பூர், நவம்பர்.27-
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள மேடான் செலெரா உணவுக் கடைகளிலும், பேரங்காடிகளிலும், அடுக்குமாடி வீடமைப்புப் பகுதிகளிலும் மலேசிய குடிநுழைத்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில் 113 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனை நடவடிக்கை கிள்ளானை இலக்காகக் கொண்டு கடந்த நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவல் மற்றும் குடிநுழைவுத்துறையின் உளவுத் தகவல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
47 அமலாக்க அதிகாரிகளின் ஆள்பலத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.
இதில் முறையான பயண ஆவணங்களைக் கொண்டு இருக்காத மியன்மார், இந்தோனேசியா, வங்காளதேசம் மற்றும் சீன நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.








