Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பொது தற்காப்புப்படையில் முதல் நிலை விருதைப் பெற்றார் பாலகிருஷ்ணன்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொது தற்காப்புப்படையில் முதல் நிலை விருதைப் பெற்றார் பாலகிருஷ்ணன்

புத்ராஜெயா, நவ. 26-


பிரதமர் துறையின் கீழ் செயல்படும் கூட்டரசு பிரதேச பொது தற்காப்புப்படையில் கடந்த 33 ஆண்டு காலமாக சேவையாற்றி வரும் லெப்டிணன்ட் மூடா பாலகிருஷ்ணனுக்கு பிங்காட் செத்தியா பெர்தஹானாட்ன் அவாம் எனும் முதல் நிலை உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயா, மெனரா ஸ்ரீ விலாயா, டேவான் ஜபாத்தான் விலாயா பெர்செக்குத்துவான் மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டரசுப்பிரதேச பொது தற்காப்பு படையினருக்கான கூட்டரசு விருதளிப்பு மற்றும் பாராட்டுப்பத்திரம் வழங்கும் விழாவில் லெப்டிணன்ட் மூடா பாலகிருஷ்ணனுக்கு முதல் நிலை உயரிய விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டார்.

பொது தற்காப்புப்படையில் அவர் வழங்கி வரும் சீரிய பங்களிப்புக்கான இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →