Sep 27, 2026
Thisaigal NewsYouTube
கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கோலாமூடா, குபாங் பாசுவில் குடிநுழைவுத் துறை அதிரடி: 10 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கெடா மாநிலத்தின் கோலாமூடா மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் குடிநுழைவுத் துறை நடத்திய 'ஆறு ஓப்ஸ்' அதிரடிச் சோதனையில், இந்தியர்கள் உட்பட 10 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாகனக் கழுவதல் , முடித்திருத்தகம் மற்றும் தங்கும் விடுதி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், மியான்மார், இந்தியா, வங்காளதேசம், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 7 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் பிடிபட்டனர். 18 முதல் 49 வயதுடைய இவர்கள், முறையான ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததற்காக குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் விசாரணைக்காக பாலிங், பெலாந்தே தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதாக மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் முகமாட் ரிட்சுவான் தெரிவித்தார்.

Related News