Sep 25, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவமனை - காப்பீட்டு நிறுவன மோதல்: சட்டம் இயற்ற ஜோகூர் பெஜுவாங் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

மருத்துவமனை - காப்பீட்டு நிறுவன மோதல்: சட்டம் இயற்ற ஜோகூர் பெஜுவாங் கோரிக்கை

Share:

தனியார் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையே ஏற்படும் நிர்வாகச் சர்ச்சைகளால், காப்பீடு வைத்துள்ள நோயாளிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசாங்கம் உடனடியாகத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஜோகூர் பெஜுவாங் கட்சி வலியுறுத்தியுள்ளது.

நிர்வாகப் பிரச்சனைகள், உத்தரவாதக் கடிதம் (GL) தாமதமாவது போன்ற காரணங்களால் ஏற்படும் கட்டணச் சுமைகளை அவசர நிலையில் இருக்கும் நோயாளிகள் மீது சுமத்தக் கூடாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ஜைனுதீன் அதான் தெரிவித்துள்ளார். அண்மையில் ஜெனராலி இன்சூரன்ஸ் மற்றும் கேபிஜே மருத்துவமனை குழுமத்திற்கு இடையே ஏற்பட்ட விவகாரம் இதற்கு ஒரு சான்றாகும் எனக் குறிப்பிட்ட அவர், சிகிச்சை தொடங்கும் முன்பே காப்பீட்டு விவரங்களைச் சரிபார்ப்பதை மருத்துவமனைகள் கட்டாயமாக்க வேண்டும் என்றும், காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசி நிபந்தனைகளில் முழு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News