Jun 2, 2026
Thisaigal NewsYouTube
கூலிம் மாவட்டத்தின் 36வது   தலைமை போலீஸ் அதிகாரியாக சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சின்ரிங் பதவியேற்றார்.
தற்போதைய செய்திகள்

கூலிம் மாவட்டத்தின் 36வது தலைமை போலீஸ் அதிகாரியாக சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சின்ரிங் பதவியேற்றார்.

Share:

கூலிம் மாவட்டத்தின் 36வது புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சின்ரிங் பதவியேற்றார்.

இன்று காலை கூலிம் ஹய் தேக் பாக்கிலுள்ள விளையாட்டு வளாகம் மண்டபத்தில் பதவியேற்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவிற்கு கெடா மாநில தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ அட்ஸி பின் அபு ஷா கலந்துக் கொண்டார்.

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கூலிம் மாவட்ட தலைமை போலீஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட சூப்ரிண்டென்டன் ஹஜி சுல்கிப்ளி பின் ஹஜி அஜிஜான் தனது 60 வயதில் பதவி ஓய்வு பெற்றார்.

தொடர்ந்து, இன்று கூலிம் பண்டார் பாரு தலைமை போலீஸ் நிலையத்தின் தலைமை அதிகாரியான சூப்ரிண்டென்டன் ஷம்சுல் பின் சின்ரிங் கூலிம் மாவட்டத்தின் புதிய தலைமை போலீஸ் அதிகாரியாக பதவி

நியமனம் செய்யப்பட்டார். இப்பதவி பொறுப்பு ஒப்படைப்பு நிகழ்வு டத்தோ அட்ஸி பின் அபு ஷா முன்னிலையில் நடைபெற்றது. அதேவேளையில் டத்தோ அட்ஸி பின் அபு ஷா டிஎஸ்பி முகமாட் சனி பின் மாட் அலி அவருக்கு சூப்ரிண்டென்டன் பதவி உயர்வு சின்னம் அணிவித்து கூலிம் பண்டார் பாரு தலைமை போலீஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். அதுடன் கெடா மாநில காவல்துறை குடும்ப நலச் சங்கத்தின் ( PERKEP) பதவி பரிமாற்றமும் நடைபெற்றது .

ஆகவே, ஓராண்டிற்கு மேல் கூலிம் மாவட்டத்தின் தலைமை போலீஸ் அதிகாரியாக பணியிலிருந்த சூப்ரிண்டென்டன் ஹஜி சுல்கிப்ளி பின் ஹஜி அஜிஜானுக்கு வாழ்தினையும் நன்றினைத் தெரவித்துக் கொண்டார் டத்தோ அட்ஸி பின் அபு ஷா.

Related News

மருத்துவமனை - காப்பீட்டு நிறுவன மோதல்: சட்டம் இயற்ற ஜோகூர் பெஜுவாங் கோரிக்கை

மருத்துவமனை - காப்பீட்டு நிறுவன மோதல்: சட்டம் இயற்ற ஜோகூர் பெஜுவாங் கோரிக்கை

சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலின் புதிய மையமாக மாறும் மலேசியா: நாட்டின் நற்பெயரைக் காக்க உடனடி நடவடிக்கை தேவை என MHO எச்சரிக்கை

சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலின் புதிய மையமாக மாறும் மலேசியா: நாட்டின் நற்பெயரைக் காக்க உடனடி நடவடிக்கை தேவை என MHO எச்சரிக்கை

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 13ஆவது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் பலி: பெற்றோர் உட்பட 8 பேரிடம் போலீஸ் விசாரணை

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 13ஆவது மாடியிலிருந்து விழுந்து சிறுவன் பலி: பெற்றோர் உட்பட 8 பேரிடம் போலீஸ் விசாரணை

செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன முதியவர்: தேடுதல் பணியில் களமிறங்கிய போலீஸ் மோப்ப நாய்கள்

செம்பனைத் தோட்டத்தில் காணாமல் போன முதியவர்: தேடுதல் பணியில் களமிறங்கிய போலீஸ் மோப்ப நாய்கள்

"ராமேஸ் கும்பல்" தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு

"ராமேஸ் கும்பல்" தலைவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு

போதைப்பொருள் மற்றும் ‘கே’ விருந்து: 51 பேர் மீது வழக்கு, சீன நாட்டவர் கைது

போதைப்பொருள் மற்றும் ‘கே’ விருந்து: 51 பேர் மீது வழக்கு, சீன நாட்டவர் கைது