Jun 9, 2026
Thisaigal NewsYouTube
சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலின் புதிய மையமாக மாறும் மலேசியா: நாட்டின் நற்பெயரைக் காக்க உடனடி நடவடிக்கை தேவை என MHO எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பலின் புதிய மையமாக மாறும் மலேசியா: நாட்டின் நற்பெயரைக் காக்க உடனடி நடவடிக்கை தேவை என MHO எச்சரிக்கை

Share:

மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வந்த சர்வதேச ஆன்லைன் மோசடி கும்பல், தற்போது மலேசியாவிற்குத் தனது செயல்பாட்டு மையத்தை மாற்றியிருப்பதாக மலேசிய சர்வதேச சமூக மனிதநேய அமைப்பு (MHO) அம்பலப்படுத்தியுள்ளது.

மத்திய புலனாய்வு அமைப்பு (FBI) போன்ற முகமைகளின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பிப்பதற்காக, இக்கும்பல் கடந்த ஆறு மாதங்களாக மலேசியாவில் குறைந்தது இரண்டு முக்கிய இடங்களில் ரகசியமாகச் செயல்பட்டு வருவதாக MHO பொதுச்செயலாளர் டத்தோ ஹிஷாமுதீன் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முகமைகள் இதனை அம்பலப்படுத்துவதற்கு முன்பாக, நாட்டின் நற்பெயரை காக்கும் வகையில் உள்நாட்டு அதிகாரிகளே இதனை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இதுகுறித்த தகவல்களை விரைவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சந்தேகத்திற்கிடமான இடங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்குமாறும், அவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News