Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மதத்தின் மீது சவாரி செய்ய வேண்டாம்
தற்போதைய செய்திகள்

மதத்தின் மீது சவாரி செய்ய வேண்டாம்

Share:

புத்ராஜெயா, மார்ச் 1 -

தங்களின் அரசியல் அபிலாஷையையும், இலக்கையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு மதத்தின் மீது சவாரி செய்ய வேண்டாம் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.

இஸ்லாத்தின் உயர்வு கட்டாயம் தற்காக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா வருத்தம் அடைந்தது இருப்பது குறித்து அரசியல்வாதிகளுக்கு அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் இந்த நினைவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அனைத்து தரப்பினரும் குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்களின் அரசியல் உயரத்தை தொடுவதற்கு மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அகமட் ஜாஹிட் கேட்டுக்கொண்டார்.

Related News