கடந்த மாதம் புகைப் பிடிக்கத் தடை செய்யப்பட்டப் பகுதிகளில் அக்குற்றத்தைப் புரிந்ததற்காக 1.45 மில்லியன் வெள்ளி மதிப்பிலான 6 ஆயிரத்து 290 அபராதச் சீட்டுகளை வெளியிட்டுள்ளது சுகாதார அமைச்சு
இதன் தொடர்பில் 22 ஆயிரத்து 361 இடங்களில் அமைச்சு தமது சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது என அதன் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முஹமாட் ரட்சி அபு ஹாஸ்ஸான் கூறினார்.
டெங்கி ஆபத்து தொடர்பில் 1975 ஆம் ஆண்டு நோயைப் பரப்பக் கூடிய பூச்சிகளை அழிக்கும் சட்டத்தின் கீழ் ஒரு மில்லியன் 726 ஆயிரத்து 500 மதிப்புள்ள அபராதச் சீட்டுகளையும் அமைச்சு வெளியிட்டதாக டாக்டர் முஹமாட் ரட்சி கூறினார்.
மேலும், 6 ஆயிரத்து 273 உணவகங்கள் நடத்தப்பட்டச் சோதனையில், உணவுச் சட்டம் 1983 பிரிவு 11இன் படி 163 உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பொது மக்களின் சுகாதாரம் காக்கப்பட வேண்டும் எனும்நோக்கத்தில் இந்தச் சோதனை நடவடிக்கைகளை அமைச்சு அவ்வப்போது மேற்கொண்டு வருவதாகவும் Dr Muhammad Radzi சொன்னார்.








