Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது
தற்போதைய செய்திகள்

பொய்யான தகவல்களைப் பரப்பும் 159 உள்ளடக்கங்களை எம்சிஎம்சி நீக்கியது

Share:

உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி நிலை தொடர்பாக மலேசியாவில் பரவி வந்த பொய்யான தகவல்களை மலேசிய தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி, நான்கு நாட்களில் மொத்தம் 159 தவறான தகவலைக் கொண்ட பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

இத்தகவல்கள் பெட்ரோல் விலை உயர்வு, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அரசு கட்டணம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டு மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு போன்ற தவறான தகவல்களை உள்ளடக்கியதாகும்.

இத்தகைய பொய்யான தகவல்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன.

சிலர் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, முக்கிய ஊடகங்களின் தலைப்புகளை மாற்றி தவறான செய்திகளை உருவாக்குவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related News