பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மேலும் ஒரு தவணைக்காலம் நாட்டை நிர்வகிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி கேட்டுக்கொண்டார். அன்வார் தமது பணியை திறம்பட செய்து முடிப்பதற்கு நியாயமான மற்றும் ஏற்புடைய ஒரு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். இந்நிலையில் மிக குறுகிய காலத்திலேயே ஆட்சி மாற்றத்தை கோருவது எந்த வகையிலும் நியாயமில்லை என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
துன் மகாதீர் முகமது பிரதமராக ஒரு நீண்ட கால அடிப்படையில், குறிப்பாக 22 ஆண்டு காலம் ஆட்சி செலுத்தியப்பின்னர் மீண்டும் ஒரு முறை நாட்டிற்கு பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு மக்கள் வாய்ப்பு வழங்கினர். துன் மகாதீருக்கு இத்தகைய விட்டுக்கொடுக்கும் போக்கை மக்கள் கடைப்பிடிக்க முடியுமானால், இதேபோன்ற வாய்ப்பு அன்வாருக்கும் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, மேலும் ஒரு தவணைக்காலத்திற்கு அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று டாக்டர் இராமசாமி வலியுறுத்தினார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


