Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் விழுங்கிய ராட்ஷச மலைப்பாம்பு
தற்போதைய செய்திகள்

பெண்ணின் விழுங்கிய ராட்ஷச மலைப்பாம்பு

Share:

இந்தோனேசியா, ஜூலை 06-

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றுக்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறியதி என்ற 36 வயது பெண், தனது குழந்தைக்கு மருந்துகள் வாங்குவதற்காக கடந்த ஜுலை செவ்வாய்க்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினார்.

அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்று அவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

தெற்கு சுலாவெசி மாநிலத்தில் உள்ள சிட்டெப கிராமத்தில் காணாமல் போன பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அவரது செருப்புகள் மற்றும் ஆடை இருந்ததைக் கண்ட 30 வயது நிரம்பிய அவரது கணவர் ஆடியன்ஸை, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருக்கிறார்.

செருப்புகள் கிடந்த இடத்திற்கு அருகில் ராட்ஷச மலைப்பாம்பு ஒன்று வயிறு பெருத்த நிலையில் உயிருடன் படுத்துக் கிடந்ததை அப்பெண்ணின் கணவர் கண்டறிந்துள்ளார்.

அந்த மலைப்பாம்பு தன் மனைவியை விழுங்கியிருக்கலாம் என்று சந்தேகித்து அதன் தலையை அந்த ஆடவர் வெட்டியுள்ளார்.

பின்னர் தனது மனைவியின் உடல் இருக்கிறதா என்று கண்டறிய பாம்பின் வயிற்றுப் பகுதியை அறுத்திருக்கிறார். அவர் சந்தேகித்தப்படியே பாம்பின் வயிற்றில் அவரது மனைவியின் உடல் இருந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்